சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் : இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப் பதக்கம்


சவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப் பதக்கதைக் கைப்பற்றினார்.
ஸ்விட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்ற போட்டியில், மகளிருக்கான ஒற்றையர் இறுதிச் சுற்றில் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார்.
இவர்கள் இருவரும் முன்னதாக 14 போட்டிகளில் எதிர்த்து விளையாடி உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
விறுவிறுப்பாக நடந்த சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனையும் 2019 ஆண்டின் உலக சாம்பியனுமான சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார்.
வெற்றிக்காக இருவரும் மல்லுக்கட்டிய நிலையில் ஆட்டத்தின் இறுதியில் கரோலினா 21-க்கு 12, 21-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதி வரை போராடிய சிந்து 2-வது இடம் பிடித்தார்.