சேத்திரபாலபுரத்தில் கிங் ஆஃப் தமிழ் டிரைவர்ஸ் உதவி


வெளிநாடுகளில் வாகன ஓட்டுநர்களாக பணி செய்து வரும் நண்பர்கள் ஒன்றிணைந்து கிங் ஆஃப் தமிழ் டிரைவர்ஸ் என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சேவை பணிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சேத்திரபலபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 20க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு உணவு மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை யோகேஸ்வரன் விக்னேஷ் பாரதி குணசீலன் பாபுஜி உள்ளிட்டோர் வழங்கினர்.