தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசு துறையில் நாலரை லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
அரசுத்துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது திடீரென அவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் பின்பு சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.