விழுப்புரத்தில் அமைய உள்ள பல்கலைகழகத்திற்கு கலைஞர் பெயரை சூட்ட தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது- அண்மையில் தமிழக அரசால் விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்கள் தோன்றுவதற்கு முழு காரணம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழகத்தில் மருத்துவ பல்கலைக்கழகம் , சட்ட பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், பொது பல்கலைக்கழகங்கள் என பல பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் தோற்றுவிக்க காரணமாய் இருந்தார்.

மாநில பட்ஜெட்டில் கல்விக்கு அதிக தொகை ஒதுக்கி பல்வேறு அரசு கல்லூரிகளை தோற்றுவித்து கிராமப்புற மாணவர்கள் கல்வி பயின்று தங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவது உயர்த்திக் கொள்வதற்கு காரணமாய் விளங்கியவர் டாக்டர் கலைஞர் அவர்கள். இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதியை நிலை நாட்டியவர். இந்தியா முழுதும் மண்டல் கமிஷன் அறிக்கை அமல்படுத்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு வலது கரமாய் விளங்கி இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு ஒதுக்கீட்டை அமல்படுத்த காரணமாய் இருந்தவர். அதுமட்டுமல்ல தமிழகத்தில் இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றுவதற்கு பல சட்ட போராட்டங்களையும் சட்டமன்றத்தின் மூலம் பல புதிய சட்டங்களையும் சட்ட திருத்தங்களையும் ஏற்படுத்தி தமிழகத்தில் சமூக நீதி நிலைநாட்டுவதற்கு தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் கண்ட கனவை நினைவாக்கிய மாபெரும் சமூகநீதிக் காவலர் டாக்டர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழகம் தலை சிறந்து விளங்குகிறது என்றால் அதற்கு டாக்டர் கலைஞர் அவர்கள் தான் முழு காரணம். இன்றைக்கு விழுப்புரத்தில் அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் கலைஞர் அவர்களுடைய பெயரை சூட்டுவது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆகையினால் தமிழக அரசு உடனடியாக விழுப்புரத்தில் அமைய உள்ள புதிய பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் கலைஞர் அவர்களுடைய பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

More News

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts