14th April 2021

பஸ் தொழிற்சங்கத்தினர் 25 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., – சி.ஐ.டி.யு., – ஏ.ஐ.டி.யூ.சி., – எச்.எம்.எஸ்., உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம், இணையவழியில் நடந்தது.இதில், அரசாணை அடிப்படையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, அரசு போக்குவரத்து கழகங்கள் பின்பற்றாதது, ஊழியர்களுக்கு சம வாய்ப்புடன் பணி வழங்காதது,மருத்துவ விடுப்பு, மாற்றுப்பணி சம்பளம் வழங்காதது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்பின், ‘அனைவருக்கும், முழு சம்பளம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் இடமாறுதல் கூடாது. ‘தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரையும் கட்டாய பணிக்கு அழைக்கக் கூடாது’ உள்ளிட்ட கோரிக்கைகளை, போக்குவரத்து செயலருக்கு கடிதம் வாயிலாக அனுப்பினர்.இந்த கோரிக்கைகளை, வரும், 24ம் தேதிக்குள் நிறைவேற்றா விட்டால், ஒவ்வொரு சங்கத்திலும், இருவர் வீதம், 25ம் தேதி, சென்னை, பல்லவன் இல்லத்தில், உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஆதரவளிக்கும் விதமாக, தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கு, ‘மிஸ்டு கால்’ கொடுப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

source

ADVERTISEMENT

 

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts

Leave a Reply