தமிழகத்திற்கு 10.25 கோடி தடுப்பூசிகள் தேவை மயிலாடுதுறையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மூன்றாவது கொரனா அலையை எதிர்கொள்ளும் விதமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில் 40 படுக்கைகள் மற்றும் 6 தீவிர சிகிச்சை படுக்கை வசதி கொண்ட குழந்தைகள் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

மூன்றாவது அலையின்போது குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்ற ஒருவித கருத்து கூறப்படுவதால் தமிழ்நாடு முழுவதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலிங் மூலம் தமிழ்நாட்டில் தேவையான மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்து உள்ளது. இதில் ஒரு கோடியே 6 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில் சுமார் 6 கோடியே 20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு, 11 கோடி அளவிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும். இன்னும் 10 கோடி அளவிலான தடுப்பூசிகள் நமக்கு தேவை உள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் ஆன டெல்டா ப்ளஸ்க்கு எதிராக தற்போதைய தடுப்பூசிகள் எப்படி செயல்படும் என்பதை இப்போதே கூற முடியாது அது வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம். தற்போது உள்ள வைரஸுக்கு எதிராக முதலாவது டோஸ் போட்டவர்களுக்கு 70 சதவிகிதமும், 2 -வது டோஸ் போட்டவர்களுக்கு 95 சதவிகிதமும் தடுப்பூசி செயல்படுகிறது.

தற்போது 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுகின்றன. முதலமைச்சர் டெல்லி செல்லும் பொழுது தமிழகத்திற்கு உரிய தடுப்பூசி மருந்துகளை வழங்க பிரதமரைக் கேட்டுக் கொள்வார். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரி விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது, தமிழக அமைச்சர் மெய்யநாதன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மாவட்ட ஆட்சியர் லலிதா ஐஏஎஸ் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page