6th December 2020

மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடி நடந்ததாக தொடர்ந்த மறுஆய்வு வழக்கு தள்ளுபடி

சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 4 மாதங்களுக்கும் மொத்தமாக மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது. இவ்வாறு மொத்தமாக மின் கட்டணம் கணக்கீடு செய்யக்கூடாது. அதற்கு பதிலாக 2 மாதங்களுக்கு ஒரு பில் என தனித்தனியாகப் பிரித்து, அதில் ஏற்கெனவே செலுத்திய முந்தைய மாத கட்டணத்துக்கான யூனிட்டை கழித்துக் கொண்டு எஞ்சிய யூனிட்டுக்குரிய தொகையை வசூலிக்க வேண்டும்” என கோரியிருந்தார். ஆனால் அரசு தரப்பில், மின் கணக்கீட்டில் எந்த குளறுபடிகளும் இல்லை. ஏற்கெனவே முந்தைய மாதத்தில் செலுத்தப்பட்ட தொகையை மட்டுமே கழிக்க முடியும் என்றும் யூனிட்டைக் கழிக்க முடியாது எனவும் பதிலளித்து இருந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மின் கட்டண கணக்கீட்டில் எந்தவொரு விதிமீறலும் நடைபெறவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி வழக்கறிஞர்எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் அமர்வு, மறுஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

SOURCE

More News

விருதுநகரில் முதல்வர் பழனிசாமி உருவ பொம்மை எரித்து சாலை மறியல்

admin See author's posts

மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலத்தில் தீ விபத்து : வீட்டை இழந்த குடும்பத்துக்கு பவுன்ராஜ் நிவாரணம் மற்றும் நிதி உதவி

admin See author's posts

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மக்களை பூம்புகார் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆறுதல்

admin See author's posts

தொடர் மழையால் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதியில் 80 வீடுகள் இடிந்தன

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts