14th April 2021

‘நோட்டா’வுக்கு ‘டாட்டா?’

நுாறு சதவீத ஓட்டுப் பதிவை உறுதிபடுத்த, முனைப்பு காட்டி வரும் தேர்தல் கமிஷன், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதவர்கள், ‘நோட்டா’வை பயன்படுத்தலாம் என்ற விழிப்புணர்வை, சற்று அதிகமாகவே ஏற்படுத்தி இருக்கிறது.இதன் தாக்கம், 2014 லோக்சபா தேர்தலில் எதிரொலித்தது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், கடைசி வரிசையில் இடம் பிடித்த, ‘நோட்டா’ பட்டனை வாக்காளர்கள் அழுத்தி தள்ளினர். தமிழகத்தில், 5.82 லட்சம், ‘நோட்டா’ ஓட்டுகள் பதிவாகின. மொத்தம் பதிவான ஓட்டுகளில் இது, 1.4 சதவீதம். பின், 2016 சட்டசபை தேர்தலில், மொத்தம், 5.65 லட்சம் ஓட்டுகள், ‘நோட்டா’வுக்கு விழுந்தன; மொத்தம் பதிவான ஓட்டுகளில் இது, 1.3 சதவீதம். இந்த, 1 சதவீத ஓட்டு, பல தொகுதிகளில், வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானித்தது.இம்முறை தேர்தல் களம் சற்றே மாறுபட்டிருக்கிறது. தி.மு.க., – அ.தி.மு.க., கட்சிகளுக்கு மாற்று என்ற முன்னெடுப்போடு, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டுள்ளன. அக்கட்சி தலைவர்கள், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், பிரசாரம் செய்கின்றனர். அவர்களின் பிரசார கூட்டங்களில், திரளான மக்களை பார்க்க முடிகிறது. பொதுவெளி மற்றும் அரசியல் சார்ந்த விவாதத்தில், அவர்களது கட்சி சார்ந்த பேச்சும் இடம் பெறுகிறது. பிரதான கட்சிகளுக்கு இணையாக தேர்தல் அறிக்கை தயாரித்து, புது பாதையை அவர்களும் காட்டியிருக்கின்றனர்.மாற்று அரசியலை விரும்பும் வாக்காளர்கள், இம்முறை, ‘நோட்டா’வுக்கு, ‘டாட்டா’ சொல்லுவார்களா, மாற்று அரசியலை முன்னெடுத்து, களம் கண்டுள்ள அரசியல் கட்சியினர் பேச்சுக்கு மரியாதை இருக்குமா என்பது, மே, 2ல் தெரிந்து விடும்.

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts