20th September 2021

இறக்குமதி சொகுசு காருக்கு வரி விலக்கு.. நடிகர் தனுஷ் வழக்கில் உத்தரவு !!

வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய நடிகர் தனுஷ் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.

நடிகர் தனுஷ், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ரூ.60.66 லட்சம் நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

ஏற்கெனவே நுழைவு வரி வசூலிக்க தடை கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டு, அதில் மேல்முறையீடு சென்று தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் தனுஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

Advertisement

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page