18th October 2021

ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்!

கொரோனா பரவல் காரணாமாக ஆசிரியர்கள் அனைவரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையானது அதிகமாக பரவி வருகிறது.இதனால், கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக, ஏற்கனவே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.ஆனால், அதே நேரத்தில் பள்ளி ஆசிரியர்கள் மட்டும் தொடர்ந்து பள்ளிக்கு வருகைப் புரிந்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பிற பணிகளையும் கவனித்துக் கொள்கின்றனர். மேலும்,தன்னார்வ அடிப்படையில் பல ஆசிரியர்கள் கொரோனா தடுப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்த விவர அறிக்கையை பள்ளி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும், கொரோனா தடுப்புப் பணிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Source: dinasuvadu

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page