மதுரையில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோவில்; முதலமைச்சர், துணை முதலமைச்சர் இணைந்து திறந்து வைத்தனர்

மதுரையில் 7 அடி வெண்கலச் சிலைகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோயிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஜெயலலிதா பேரவை சார்பில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூரில் 12 ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் திறப்பு விழாவுக்கு வருகை வந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு, அமைச்சர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் யாகசாலை புனிதநீர் கலசத்தில் தெளித்த பிறகு கோயில் திறப்பு விழா நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து கோயிலை திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து 234 நலிவுற்ற அதிமுக தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தனர். விழாவில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு வேல் வழங்கப்பட்டது.

முன்னதாக மதுரை விமான நிலையத்திலிருந்து திறந்தவெளி வாகனத்தில் வந்த இபிஎஸ் – ஓபிஎஸ்க்கு சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts