22nd October 2021

மயிலாடுதுறை அருகே முகவர்கள் இல்லாமல் சீல் உடைத்து விவிபாட் பேட்டரியை அதிகாரிகள் கழற்றியதால் பதற்றம் !

மயிலாடுதுறை அருகே முகவர்கள் இல்லாமல் சீல் உடைத்து விவிபாட் பேட்டரியை அதிகாரிகள் கழற்றியதால் பதற்றம் !

மயிலாடுதுறை தொகுதி செருதியூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிவடைந்து சீல் வைக்கப்பட்ட பின்னர்,முகவர்கள் இல்லாமல் சீல் உடைத்து விவிபாட் பேட்டரியை அதிகாரிகள் கழற்றியதால் பதற்றம்மறு தேர்தல் நடத்த அனைத்து கட்சியினர் கோரிக்கை.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி செருதியூர் ஸ்ரீ வாணி விலாஸ் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி 263-ல் இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.பின்னர் இரவு 10.30 மணிக்கு வாக்குப்பெட்டிகள் வேனில் ஏற்றப்பட்டது.விவிபாட் இயந்திரத்தை இறக்கி,முகவர்கள் இல்லாமல் சீல் உடைத்து பேட்டரியை கழற்றி உள்ளனர்.இதைப்பார்த்த வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டனர்.நேரம் வாக்குப்பதிவு மையத்தின் முன்பு அனைத்துக்கட்சியினர் கூடி கூச்சல் எழுப்பினர்.அதிகாரிகளின் பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பிரான்சுவா நினைவிடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.முகவர்கள் இல்லாமல்,வாக்கு பதவியில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்றும்,மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென்றும் அனைத்து கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜே பாலாஜி சம்பவ இடத்திற்கு வந்து சித்தரிக்கப்பட்ட விவிபாட் இயந்திரத்தை பார்வையிட்டார்.பின்னர் அவர் இது அதிகாரிகளின் அறியாமையால் ஏற்பட்ட தவறு என்றும் வாக்கு எண்ணிக்கையின் போது இந்த மையத்தில் பதிவான வாக்குகளில் எந்த உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினர் கலைந்து சென்றனர்.

More News

மதுபானம் கலந்த ‘போதை’ ஐஸ்கிரீம்… உடனடியாக கடைக்கு சீல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

admin See author's posts

மயிலாடுதுறை: கூறைநாடு நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கும் மழை நீரால் கர்ப்பிணிகள் அவதி!

admin See author's posts

மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

admin See author's posts

சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி!

admin See author's posts

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்!

admin See author's posts

மயிலாடுதுறை: மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் அருகே பாலவெளி பகுதியில் மது அருந்துபவர்கள் அட்டகாசம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை!

admin See author's posts

You cannot copy content of this page