தைப்பூசத் திருவிழா கோலாகலம்”.. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்..!


தைப்பூசத் திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டுள்ளனர்.
சென்னை:
சென்னை வடபழநி முருகன் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பால்குடம் எடுத்தும், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் வழிபடுவது வழக்கம். கோவில் பராமரிப்பு பணி காரணமாக இவை தடைசெய்யபட்டுள்ளன
வடலூர்:
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை முன்பு இருந்த ஏழு திரைகள் அகற்றப்பட்டு வள்ளலார் தீபம் காட்சி தரப்பட்டது.
அதிகாலையிலே குவிந்த ஏராளமான பக்தர்கள் ஜோதியைக் கண்டு அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி, தனி பெரும் கருணை அருட்பெரும்சோதி என்ற மந்திரத்தை உச்சரித்தனர்.