அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

தரங்கம்பாடி, ஜுன்.13: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. முன்னாள் தரங்கம்பாடி பேரூராட்சி கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் தலைமை வகித்தார். விநாயகர் பாளையம் கிராம தலைவர் நாகராஜன், தொழிலதிபர் ஏ.கே. சந்துரு, வர்த்தக சங்கத் தலைவர் நடராஜன், மயிலாடுதுறை மாவட்டம் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்க தலைவர் பாலா.ரவிச்சந்திரன், செயலாளர் கிங் பைசல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தரங்கம்பாடி பேரூராட்சி துப்புரவு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு கரோனா பெருந்தொற்றால் வேலை வாய்ப்பை இழந்த அனைத்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார். இதில், உதவி ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன், சமூக ஆர்வலர்கள், காவலர் மணிபாரதி, திமுக பொறுப்பாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பட விளக்கம்: தரங்கம்பாடியில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியபோது.

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page