26th February 2021

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: முதலமைச்சர்

தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடையவுள்ளது.இந்த சூழ்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது பேசிய முதலமைச்சர், கொரோனா தடுப்பு நடவடிக்கை விவகாரத்தில் தமிழகத்தை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார் என்றும், இந்த நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அரசு சுமார் 7,323 கோடி ரூபாய் செலவிட்டு இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். இதில் மருத்துவத்துக்கு 1,983 கோடி ரூபாயும், நிவாரணம் சார்ந்த பணிக்கு 5,340 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன என்றார்.

SOURCE

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts