26th November 2020

ரேஷனில் தினமும் 80 பேருக்கு பொருட்கள் வழங்க உணவுத்துறை முடிவு

ரேஷனில், கூட்டம் சேருவதை தடுக்க, தினமும், ஒரு கடையில், 80 கார்டுதாரர்களுக்கு மட்டும் பொருட்கள் வழங்குவதை கட்டாயமாக்க, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள, 35 ஆயிரத்து, 244 ரேஷன் கடைகள் வாயிலாக, 2.08 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஒரு கடையில், 1,300க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர். இதனால், அந்த கடைகளுக்கு வருவோர் கூட்டமாக காத்திருந்து, பொருட்களை வாங்குகின்றனர்.

வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து இடங்களிலும், சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, ரேஷன் கார்டுதாரர்கள், எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, ‘டோக்கன்’களும் அவர்களின் வீடுகளில் வழங்கப்பட்டன. இருப்பினும், பலர் அதை பின்பற்றாமல், தங்களின் விருப்பப்படி கடைகளுக்கு வந்து, கூட்டம் சேருகின்றனர்.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊரடங்கால், ரேஷன் கடைகளுக்கு வருவோர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது.

ஒரு கார்டுதாரருக்கு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை எடை போட்டு வழங்க, 15 நிமிடமாகிறது.ரேஷன் கடைகளில், வரிசையாக நின்று, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தியும், பலர் பின்பற்றுவதில்லை. அதை, ஊழியர்கள் கண்காணிப்பதும் சிரமமாக உள்ளது.எனவே, ஒரு கடையில் தினமும், 80 பேருக்கு மட்டும் பொருட்களை வழங்குவதை கட்டாயமாக்க, பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

எந்த தேதியில் பொருட்கள் வழங்கப்படும் என்ற விபரம், கடைகள் முன் எழுதி வைக்கப்படும். கார்டுதாரர்களும், அதற்கு ஏற்ப வருவர். இதனால், கூட்டம் சேராது. சமூக இடைவெளியும் பின்பற்றப்படும். ஊழியர்களுக்கும் சிரமம் ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.

source

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

Leave a Reply