மாஸ்க் இல்லையெனில் இனி பெட்ரோல் இல்லை – வணிகர்கள் சங்கம் அறிவிப்பு!!


மாஸ்க் இல்லையெனில் பெட்ரோல் இல்லை – வணிகர்கள் சங்கம் அறிவிப்பு!!
நாட்டில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மக்கள் அனைவரையும் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாஸ்க் அணியவில்லை என்றால் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படமாட்டாது என்று வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மாஸ்க் கட்டாயம்:
கடந்த ஆண்டை விட தற்போது இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக அதிகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்குநாள் மிக அதிகமாக இருந்து வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் தற்போது நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் மிக தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் சுகாதாரத்துறையினர் நாட்டு மக்கள் அனைவரையும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் இதனை கடைபிடிக்க தவறுபவர்களிடம் அபராதம் விதித்தும் வருகின்றனர். இந்நிலையில் தற்போது இதனை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Source : ExamsDaily