26th February 2021

விஜய்யுடன் அடுத்த படமா? – மெர்சல் தயாரிப்பாளர் பதில்

தேனாண்டாள் ஃபிலிம்ஸ்க்கு விஜய் படம் நடித்துக் கொடுப்பார் என்பது மெர்சல் வந்த நேரத்தில் முடிவு செய்யப்பட்டது என்று தயாரிப்பாளர் முரளி தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால் சன் பிக்சர்ஸ் உடன் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக ஏ.ஆர்.முருகதாஸ் விலகியதாக தகவல் வெளியானது.

இதையடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது விஜய்க்கு 65-வது படம் என்பதால் தற்காலிகமாக ‘தளபதி 65’ என்றே அனைவரும் அழைத்து வருகின்றனர். தற்போது இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘டாக்டர்’ திரைக்கு வந்ததும் ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனது 65-வது படத்தை அடுத்து செவன் ஸ்க்ரீன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் இருக்கிறது. அதே நேரம் சமீபத்தில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ்க்காக விஜய் படம் நடிக்கிறார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இதுகுறித்து தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளியிடம் கேட்டபோது, எங்கள் நிறுவனத்துக்காக விஜய் படம் நடித்துக் கொடுப்பார் என்பது மெர்சல் நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. இப்போது ஏன் அது மீண்டும் புகைகிறது என தெரியவில்லை. ஆனால் எந்தப் படம் என்பது இன்னும் முடிவாகவில்லை”என்றார்.

எனவே தற்போதைக்கு தேனாண்டாள் நிறுவனத்துடன் விஜய் ஒரு படம் நடிக்க இருப்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. 65-வது படத்தின் ஷூட்டிங் தொடங்கிய பின்னர்தான் விஜய் அடுத்த கட்ட முடிவுகளை எடுப்பார் என தெரிகிறது.

More News

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts