14th April 2021

ஒரு வாக்கின் சக்தி: ஒரு வாக்கு வித்தியாசத்தில் கூட வாழ்க்கை மாறலாம்

ஒரு நொடியின் மகத்துவம் தெரிய வேண்டுமா? ஒலிம்பிக் போட்டியில் முதல் பரிசை இழந்தவரிடம் கேட்டுப் பாருங்கள் என்பார்கள். அதுபோல, ஒரே ஒரு வாக்கின் சக்தியை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியர்களிடம்தான் கேட்க வேண்டும்.

நான் ஒருவர் வாக்களிக்காவிட்டால் என்ன? என்னுடைய ஒரு வாக்கினால் யாருக்கு லாபம்? என்று கேட்பவர்களுக்காகவே இந்தப் பதிவு.

அதாவது நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் பல தேர்தல்களில். இந்தியாவிலும் கூட.

2004-ஆம் ஆண்டு கர்நாடக பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது சாந்தேமரஹள்ளி (தனி) தொகுதியில் போட்டியிட்ட ஏ.ஆர். கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் வேட்பாளர் ஆர். துருவ்நாராயணனிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கிருஷ்ணமூர்த்திக்கு 40,751 வாக்குகள் கிடைத்த நிலையில், வெற்றி பெற்ற துருவ்நாராயணன் பெற்ற வாக்கு 40,752 வாக்குகள்.

அடுத்து, 2008-ஆம் ஆண்டு ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் நடந்துள்ளது. நதட்வாரா பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சி.பி. ஜோஷி, பாஜக வேட்பாளராக கல்யாண் சிங் சௌஹான் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான போது, 62,216 வாக்குகள் பெற்ற சௌஹான் வெற்றி பெற்றதாகவும், அவரை விட ஒரே ஒரு வாக்கு குறைவாகப் பெற்ற ஜோஷி 62,215 வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியதாகவும் அறிவிக்கப்பட்டது.

இது ஜோஷிக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், அவர் அப்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், முதல்வர் வேட்பாளராகவும் அறியப்பட்டவர். இவர், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற தலைமையேற்றுப் பணியாற்றினார். ஆனால், ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

இது தொடர்பான அவர் நீதிமன்றம் வரைச் சென்று போராடினார். ஆனால் உச்ச நீதிமன்றம் இவரது தோல்வியை உறுதி செய்தது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சிபி ஜோஷி தோல்வியடைந்தபோது, அவரது தாய், சகோதரி, கார் ஓட்டுநர் மூவரும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யத் தவறிவிட்டனர். அதுபோலவே, கர்நாடக விவகாரத்தில் கிருஷ்ணமூர்த்தியின் கார் ஓட்டுநரும், வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை கிடைக்காததால், தனது வாக்கினை செலுத்தத் தவறிவிட்டார். எனவே, ஒவ்வொரு தனி மனிதரின் ஓட்டும் மிகவும் அவசியம்.

அவ்வளவு ஏன், 1999-ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சிக்கு, அதிமுக அளித்து வந்த ஆதரவு திரும்பப் பெறப்பட்டது. நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக தோல்வியடைந்தது. ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்து, ஒரே ஒரு வாக்கினால், ஆளும் கட்சி எதிர்க்கட்சியானது.

 

Source : Dinamani

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts