28th February 2021

அதிநவீன வசதிகள் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர்

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அகமதாபாத்தில் நவீன் வசதிகளுடன் கட்டப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

*அகமதாபாத் சபர்மதி நதிக்கரை ஓரம் கடந்த 1982ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த சர்தார் வல்லபாய் படேல் மோதிரா மைதானம் கடந்த 2015ம் ஆண்டு இடிக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

*49 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருந்த இந்த மைதானம் தற்போது ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது.

*அதிகபட்சமாக மெல்போர்ன் 90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட மைதானமாக உள்ளது. இதனை முறியடித்து மிகப்பெரிய மைதானமாக அமைக்கப்பட்டுள்ளது.

*சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் அதிநவீன வசதிகள் உள்ளன. பயிற்சிக்கென தனித்தனியே 2 மைதானங்கள் பெவிலியனுடன் அமைக்கப்பட்டுள்ளது.

*8 செ.மீ. மழை பெய்தாலும் கூட அடுத்த சில மணி நேரத்தில் போட்டியை நடத்தும் வகையில் வடிகால் வசதி உள்ளது. மின்விளக்கு கோபுரங்களுக்கு பதிலாக மேற்கூரைகளின் விளிம்பில் எல்இடி விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன.

*இதனால் மைதானத்தில் நிழல் விழாது. 4 டிரஸ்சிங் ரூம், நீச்சல் குளம், பிரமாண்ட உணவகம் உள்ளிட்டவை உள்ளன.

*இந்த நிலையில்  உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு மற்றும் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

*தொடர்ந்து, அகமதாபாத்தின் மோட்டேராவில் சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்க்ளேவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவிபூமி பூஜைசெய்தனர்.

*இதனிடைய இந்த மைதானத்தில் இன்று முதல் போட்டி  பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியாஇங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts