இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் எடுத்து செல்லும் அவலம்: சீர்காழி அருகே திடீர் மறியலால் பரபரப்பு!

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவர் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் யாராவது இறந்து விட்டால் அவர்களை பக்கிங்காம் கால்வாய் மறு கரையில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்று தகனம் செய்வது வழக்கம். பல ஆண்டுகளாக பக்கிங்ஹாம் கால்வாயில் பாலம் இல்லாததால் இறந்தவர் உடலை கால்வாயில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் தூக்கி சென்று அடக்கம் செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் யாராவது இறந்தால் அவர்களை தூக்கி செல்வதில் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ந்து பக்கிங்காம் கால்வாயில் பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பக்கிங்காம் கால்வாயில் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக முதலைகள் நடமாட்டம் உள்ளது குறித்த எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வேறு வழியின்றி இறந்தவர்களின் உடலை இந்த கால்வாயை கடந்தே அச்சத்துடன் சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொடுவாய் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி விசாலாட்சி என்பவர் இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய எடுத்துச் சென்ற மக்கள் பக்கிங்காம் கால்வாயை கடந்து செல்ல பாலம் அமைத்து தரக்கோரி அவரது உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கிராம பெரியவர்கள் கோரிக்கையை ஏற்று மூதாட்டியின் உடலை பக்கிங்காம் கால்வாய் வழியே எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Source: தினகரன்

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page