25th September 2021

நம்ம கிட்ட இருக்கிற இரண்டு காரும் சொகுசு கார் தான் மா.. மனைவிக்கு பப்ஜி மதன் அறிவுரை..!

யூடியூப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதன் கடந்த ஜூன் 18-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் ஜூலை மாதம் 6-ம்தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் பப்ஜி மதனை போலீசார் ஆஜர்படுத்தி உள்ளனர்.கிருத்திகாவுடன், பப்ஜி மதனின் பெற்றோரும் அறிவுரை கழக வளாகத்தில் அவரை சந்திக்க வந்தனர்.குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அதனை அறிவுரைக்கழகம் உறுதி செய்தல் வேண்டும். அதனடிப்படையில் பப்ஜி மதன் அறிவுரை கழகத்தில் ஆஜராகி தன் மீது போடப்பட்டுள்ள குண்டாஸ் ரத்து செய்ய தன் தரப்பு வாதங்களை முன் வைக்க வேண்டும். இந்த நிலையில் இன்று அவர் ஆஜராகினார்.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் மாசிலாமணி, ரகுபதி, ராமன் ஆகியோர் முன் பப்ஜி மதன் ஆஜரானார். அப்போது அவரது மனைவி கிருத்திகா தனது குழந்தையுடன் சென்று வாதிட்டார்.

“தடை செய்யபட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடவில்லை. சீனா செயலிதான் தடை செய்யப்பட்டுள்ளது. கொரியா வெர்ஷன் ஆன்லைன் விளையாட்டை தான் விளையாடி பதிவேற்றினோம். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவிற்கு தவறு செய்யவில்லை. சாதாரண சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம்” என மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா அறிவுரை கழகத்தில் வாதிட்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்த பின்னர் பப்ஜி மதனை சிறையிலடைக்க போலீசார் அவரை அழைத்து சென்றனர். குறிப்பாக போலீசார் பப்ஜி மதனை வேனில் அழைத்து வந்தபோது அறிமுக வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வேல் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பப்ஜி மதனும் அவரது மனைவி கிருத்திகாவும் சில மீட்டர் தூரம் தள்ளி இருந்த நிலையில் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.

மேலும் பப்ஜி மதன் தனது மனைவிக்கு “நாம் வைத்திருக்கும் இரண்டு கார்களுமே சொகுசு கார்கள் தான். இனி நம்மிடம் சொகுசு கார் இல்லை என வெளியில் யாரிடமும் கூறாதே எனவும் மேலும், காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள இரண்டு கார்களையும் வழக்கறிஞர்களை வைத்து வெளியே எடுத்து விடு எனவும்” என அறிவுரை கூறினார்.

யூடியூப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதன் கடந்த ஜூன் 18-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினார்கள்.இந்நிலையில் ஜூலை மாதம் 6-ம்தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page