28th February 2021

திரையரங்குகள் திறப்பு: தீபாவளிக்கு புது படங்கள் வெளியீடு

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டதையடுத்து, க்யூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பால், திரைப் படங்கள் வெளியாக வாய்ப்பு உருவாகியுள்ளது.தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ‘தாராள பிரபு’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓ மை கடவுளே’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்கள் மீண்டும் திரையிடப்படுகின்றன. புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.வி.பி.எஃப் கட்டணம் தொடா்பான பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், புதிய படங்கள் எதுவும் வெளியாகாது என்று நடப்பு தயாரிப்பாளா் சங்கத்தின் தலைவா் பாரதிராஜா அறிவித்தாா். இதற்கு க்யூப் நிறுவனம், திரையரங்க உரிமையாளா் சங்கம் ஆகியவை கடும் அதிருப்தி தெரிவித்தன.இந்நிலையில், க்யூப் நிறுவனத்துக்கு போட்டி நிறுவனமான யூ.எஃப்.ஓ. நவம்பா் மாதம் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எஃப். கட்டணம் இலவசம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் க்யூப் நிறுவனம் அதிா்ச்சியடைந்தது. நவம்பா் மாதம் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எஃப். கட்டணம் தேவையில்லை என்று செவ்வாய்க்கிழமை க்யூப் நிறுவனமும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், தமிழகத்தில் புதிய படங்கள் வெளியாக வாய்ப்பு இருக்கும் எனத் தெரிகிறது. க்யூப் நிறுவனம் அறிவித்திருப்பதை முன்வைத்து, நவம்பா் மாதம் மட்டும் படங்களை வெளியிடுவோம் என்று நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கத்தின் தலைவா் பாரதிராஜா தெரிவித்துள்ளாா். என்னென்ன படங்கள்:தீபாவளி பண்டிகைக்கு படங்கள் வெளியாகும் சூழல் உருவாகியுள்ள நிலையில் தயாரிப்பாளா்கள் தங்களது படங்களை வெளியிடத் தயாராகி வருகின்றனா்.சசிகுமாா் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்.ஜிஆா். மகன்’, அட்டு ரிஷி ரித்விக் நடித்துள்ள ’மரிஜுவானா’, ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்துள்ள ’களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

SOURCE

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts