20th September 2021

ரேஷன் அரிசியை விற்றால் ரேஷன் பொருட்கள் கிடையாது! – தமிழக அரசு!

ரேஷன் அரிசியை விற்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் நிலையில் தமிழக ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. கடத்தியது ரேஷன் அரிசிதான் என உறுதிப்படுத்திய நீதிபதிகள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு ‘ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்டு கை ரேகை பதிவின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே அரிசி வழங்கப்படுகிறது’ என்று கூறியுள்ளது. மேலும் ரேஷன் அரிசியை வெளியில் விற்போருக்கு ரேஷன் உணவு பொருட்கள் வழங்குவதை நிறுத்தவும், போலி ரேசன் அட்டைகளை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

 

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page