25th September 2021

திருவாரூர்: 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை!

3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவு.

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கு உடனடியாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காக மகிளா நீதிமன்றம் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்டது. அதனை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள மகிளா நீதிமன்றத்தில் குற்ற வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது வழங்கப்பட்டு வருகிறது.

போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞருக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே சேகரை கிராமத்தை சேர்ந்த விஜய் என்ற இளைஞர், கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த 3வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசரானையின் அடிப்படையில் சேகரையை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் விஜய் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த திருவாரூர் மகிளா நீதிமன்றம் குற்றவாளி விஜய்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்த்து அளித்ததுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்தது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து குற்றவாளி விஜய்யை திருவாரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளி விஜய்க்கு தண்டனை பெற்று தந்த மகளிர் காவல் துறையினரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பாராட்டினார்.

மேலும் இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம், புகார் அளிப்பவர் பெயர் மற்றும் விலாசம் ஆகியவை ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் புகாருக்கு ஆளாக்கப்படும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொள்வார்கள், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரித்துள்ளார்.

போக்சோ சட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை பதிவாகியுள்ள வழக்குகள் குறித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page