25th September 2021

திருவாரூர் : ஏடிஎம்-மில் கொள்ளை மற்றும் கொலை; 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

திருவாரூர் மாவட்டம் கூடூர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு நபர்களை, திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளார்கள். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் அருகே திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கூடூர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 19.06.21 அன்று இரவு இரண்டு டூவீலர்களில் வந்த நான்கு மர்ம நபர்கள், இந்த ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இதனால் சத்தம் கேட்டதால், எதிர் வீட்டில் வசிப்பவர், ஏடிஎம் மையம் செயல்படக்கூடிய கட்டடத்தின் உரிமையாளரான தமிழரசன் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு ஃபோனில் தகவல் தெரிவித்தார். மேலும் ரோந்து காவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் அங்கு மக்கள் கூடியதால், கொல்ளையர்கள் நான்கு பேரும் டூ வீலர்களில் தப்பிச் செல்ல முயன்றனர். ரோந்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள், துரத்தி சென்றபோது, ஒருவன் மட்டும் பிடிபட்டான். மற்ற மூவரும் தப்பிச் சென்றனர். அடுத்த சிறிது நேரத்தில் மற்ற கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து, தாக்குதல் நடத்தி, பிடிப்பட்ட மற்ற ஒரு கொள்ளையனை மீட்க முயற்சி செய்தனர்.

அப்போது, ஏடிஎம் மையத்தின் கட்டட உரிமையாளர் தமிழரசன் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். மார்பு பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டு, இதயம் பாதிக்கபட்டதால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஏடிஎம் கொள்ளை முயற்சி மற்றும் தமிழரசன் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட புள்ளமங்கலத்தைச் சேர்ந்த விஜய், பிரதாப், ஆகாஷ் மற்றும் லட்சுமாங்குடியைச் சேர்ந்த மதன் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் காய்திரி கிருஷ்ணனுக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், இந்த நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்கள். அதனை தொடர்ந்து, இவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாக பணிபுரிந்ததாக, திருவாரூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தினேஷ்குமார் மற்றும் திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பாராட்டு தெரிவித்தார். மேலும் இம்மாவட்டத்தில் குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை செய்துள்ளார்.

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page