24th November 2020

தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக உயர்மட்டக்கழு அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.!!!!

சென்னை: தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்மட்டக்கழு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தொழில்துறையில் முன்னணி மாநிலமாக திகழ தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த 5 மாதங்களில் 55 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மட்டும் 40,000 கோடி அளவிற்காக முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 74,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்பட்டது.`

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்கவும், ஒரு நாட்டில் இருந்து வெளியேறும் நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டுவரவும், புதிய முதலீடுகளை அனுமதிக்கவும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த உயர்மட்டக்குழு மாதந்தோறும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் எந்தன நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், எந்தனை நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளது குறித்தும் எந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கலாம் என்பது குறித்தும் எந்த இடத்தில் அனுமதி வழங்கலாம், இதனால் எந்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் முடிவில் எந்ததை தொழில்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் எந்தனை நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கவுள்ளது என்பது குறித்த அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

source

More News

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts