புதுச்சேரி அங்கன்வாடிகளில் இனி வாரம் மூன்று முட்டைகள்!


புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அங்கன்வாடிகளிலும் குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முட்டைக்குப் பதில் மூன்று முட்டைகளை வழங்க தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி (பொறுப்பு) துணைநிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மூன்று முட்டை தருவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்துக்கும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள 29,846 குழந்தைகளுக்கு இனி மூன்று முட்டைகள் வழங்கப்பட உள்ளது.