14th April 2021

கொரோனா குறித்த மூன்று உண்மைகள்

கொரோனா குறித்த மூன்று உண்மைகள்:உலக சுகாதார அமைப்பு தலைவர்

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வீரியம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் பல நாடுகளில் வைரஸின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதில் இந்தியாவும் அடக்கம். தற்போது உலக சுகாதார அமைப்பு வைரஸ் பரவல் குறித்து ஓர் கருத்தை முன்வைத்துள்ளது.இந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அண்டனம் கெப்ரியாஸிஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். கொரோனா வைரஸ் பரவல் மற்றும் உருமாற்றம் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் நிலவி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை என்று அவர் கூறியுள்ளார்.சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் உலக சுகாதார அமைப்பு, அவ்வப்போது வைரஸ் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு பகிர்ந்து வருகிறது. சமீபத்தில் சீனாவின் வூஹான் நகருக்குச் சென்ற உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள், வைரஸ் பரவல் குறித்து ஆராய்ந்து வந்தனர்.இரண்டு மாதங்களாக வூகான் பரிசோதனைக் கூடத்தில் உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டதில் மூன்று உண்மைகளைக் கண்டறிந்து உள்ளனர்.

அவை பின்வருமாறு:1.வவ்வால்களிலிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவது சாத்தியமாக இருக்க வாய்ப்புள்ளது.2.குளிர் நிலையில் பதப்படுத்தப்பட்ட உணவை மனிதர்கள் உண்பதால் வவ்வால்கள் உடலில் பரவியுள்ள வைரஸ் மனிதர்களை தாக்கும் வாய்ப்பு உள்ளது.3.பரிசோதனை கூடத்தில் இருந்து வவ்வால் இறகு சாம்பிள் இறைச்சி மார்க்கெட்டில் கலந்தது என்பது நம்புவதற்கு மிகவும் கடினமான விஷயம்இந்த மூன்று முடிவுகளை மட்டுமே இறுதியான முடிவுகள் எனக் கூறமுடியாது எனவும் வைரஸ் பரவல் குறித்து மேலும் தொடர் ஆய்வுகள் பல தேவைப்படலாம் எனவும் டெட்ராஸ் அண்டனம் கெப்ரியாஸிஸ் தெரிவித்தார்.

Source : DailyHunt

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts