14th April 2021

இன்று முதல் தமிழகத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின் விநியோகம் !

இன்று முதல் தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்களுக்கு 24 மணி நேர மும்முனை மின் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் விவசாயப் பணிகளுக்கும் இலவச மின் விநியோகம் அளிக்கப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் 22 லட்சம் மின் இணைப்புக்கள் இலவச மின் விநியோகம் பெற்று வருகின்றன.

இந்த இலவச மின்சாரம் ஒரு முனையில் மட்டுமே பல இடங்களில் வழங்கப்படுகின்றன. மேலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே விவசாய இணைப்புக்களுக்கு மின் விநியோகம் அளிக்கப்படுகின்றது. விவசாயிகள் தங்களுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின் விநியோகம் செய்ய வேண்டுகோள் விடுத்தனர்.

தமிழக முதல்வர் கோரிக்கையை ஏற்று விவசாயப் பணிகளுக்கு ஏப்ரல் 1 முதல் எந்நேரமும் மும்முனை மின்சாரம் அளிக்கப்படும் என அறிவித்தார். இது அரசாணையாக வெளியிடப்பட்டது. இன்று முதல் அந்த அரசாணை அமலாகிறது. இதனால் மின் தேவை வழக்கத்தை விட 500 மெகாவாட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Source :Dailyhunt

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts