சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நேரம் குறைப்பு


சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்து வருகிற 7-ந்தேதி முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் இயக்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இந்நிலையில் சென்னையில் செப்டம்பர் 7 முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்; மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.