திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதிவுயேற்பு விழா


திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா 23.07.2020 வியாழக்கிழமை திருக்கடையூர்
கலைமகள் மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் எஸ். உதயகுமார் அவர்கள் தலைமை வகித்தார் முன்னாள் ஆளுநர்
கே. பிரேம் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை பணியில் அமர்த்தி சிறப்புரை வழங்கினர்.
அதை தொடர்ந்து முன்னாள் எஸ். வீரபாண்டியன், சாசன தலைவர் என்.ஜி. கலியபெருமாள் அவர்கள்
சேவை திட்டங்களை தொடங்கி வைத்தார். மண்டல தலைவர் திருமாவளவன், வட்டார தலைவர் மதிவாணன் மற்றும் எம். சிவநேசம், எஸ்.எம். விஜய் ஆனந்த், எஸ். தீன் முகம்மது, என்.மணிவண்ணன், எஸ். வீர்சாமி, எஸ். உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சங்கத்தின் 2020-2021ஆம் ஆண்டின் புதிய தலைவராக ஆர்.எம். ஐயப்பன் அவர்களும், செயலராக எம். பாலமுருகன் அவர்களும், பொருளாலராக
எம்.கே. கணேஷ் அவர்களும் மற்றும் சங்க நிர்வாக அலுவலராக எஸ்.கலியபெருமாள் அவர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.