25th November 2020

தமிழக அரசாணை 101ல் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும்- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை 2019 கல்வி உரிமை கருத்தரங்கம் மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கலந்து கொண்டார். மாவட்ட இணைச் செயலாளர் சிவவேலன், பாலசுப்ரமணியன், ஸ்ரீதர், சீதாராமன் , ஜான்கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பேசுகையில், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும் என்று தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக போராடி வருகின்றனர். எனவே தேர்தல் பரப்புரையில் தெரிவித்தபடி புதிய பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும், ஒட்டுமொத்த அதிகாரங்களையும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கும் அரசாணை 101ல் உள்ள பல்வேறு குறைபாடுகளை களைய வேண்டும் என தெரிவித்தார்.

பொதுக்குழு முடிவில் உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

Leave a Reply