இன்று தேசிய ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் தினம்! ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்சை வீட்டிலேயே செய்வது எப்படி?

ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2

சோள மாவு –1 ஸ்பூன்

அரிசி மாவு –1 ஒரு ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு,

உப்பு – தேவையான அளவு

ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்முறை:

இரண்டு உருளைக் கிழங்குகளை தோல் நீக்கி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பிறகு அதனை  ஒவ்வொன்றாக எடுத்து  நீளவாக்கில் மெல்லியதாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். நம்மால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு மெல்லியதாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். பின்னர் வெட்டிய துண்டுகளை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதன் மீது தேவையான அளவு உப்பு தூவி அணைத்து இடத்திலும் உப்பு படரும்படி பிரட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் உருளைக்கிழங்கு கலர் கருப்பாக மாறாமல் இருக்கும்.

பிறகு ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பின் மீது வைக்க வேண்டும். இட்லி தட்டில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஒவ்வொரு இட்லி குழியிலும் தடவி விட வேண்டும். பின்னர் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொரு குழியிலும் நான்கைந்து துண்டுகள் இருக்குமாறு வைக்க வேண்டும். இவ்வாறு அனைத்து துண்டுகளையும் இட்லி பாத்திரத்தில் வைத்து பாத்திரத்தை மூடி சரியாக 3 நிமிடம் மிதமான தீயில் வேக விட வேண்டும். சரியாக 3 நிமிடம் கழித்து இட்லி குக்கரை திறந்து உருளைக்கிழங்கு துண்டுகளை வெளியில் எடுத்து காய்கறி வெட்டும் பலகையில் வைத்து உலர விட வேண்டும். உருளைக்கிழங்கு அதிகமாக வெந்துவிடக் கூடாது, அதனால் 3 நிமிடத்தில் எடுப்பது அவசியம்.

பிறகு ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு போட்டு கலந்துவிட வேண்டும். இப்பொழுது உலர்த்தப்பட்ட உருளைக்கிழங்கு துண்டுகளை இந்த மாவில் சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்க வேண்டும். நான்கைந்து துண்டுகளாக ஒன்றன் பின் ஒன்றாக பிரட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாவு உருளைக்கிழங்கு துண்டுகள் மீது லேசாக ஒட்டினால் மட்டும் போதும்.

அடுப்பில் கடாயை வைத்து கடாய் நன்றாக சூடானதும் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை எண்ணெய்யில் சேர்த்து நன்றாக பொரித்தெடுக்க வேண்டும். அடுப்பை அதிக தீயில் வைத்து கூட பொரித்து எடுக்கலாம். உருளைக்கிழங்கு பொன்னிறமாக மாறும் வரை இதை பொரியவிடவேண்டும். இப்படி மீதமுள்ள அனைத்து உருளைக்கிழங்கு துண்டுகளையும் பொரித்து எடுக்க வேண்டும்.

பொரித்து எடுத்த ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்ஐ ஒரு சிறிய தட்டில் வைத்து அதனுடன் சிறிதளவு தக்காளி சாஸை சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி உண்பார்கள். இது நீங்கள் கடையில் வாங்கும் அளவிற்கு மிகவும் சுவையாகவும் இருக்கும். இதனை நீங்கள் வீட்டில் செய்து உங்கள் குழந்தைகளை மகிழ்விக்கலாம்.

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page