ரேஷன் கடை பொருள்களுக்கு நாளைமுதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்

நியாய விலைக் கடை பொருள்களை விநியோகிக்க டோக்கன்கள் வழங்கும் பணி சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது. இதற்கான சுற்றறிக்கையை உணவுப் பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:-ஆகஸ்ட் மாதத்துக்கான பொருள்கள் நியாய விலைக் கடைகளில் வரும் 5-ஆம் தேதி முதல் வழங்கப்படும். இதற்காக வரும் 1, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும். டோக்கன்களில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொருள்கள் வாங்க வர வேண்டும். டோக்கன்களில் குறிப்பிடப்படாத நேரத்தில் பொருள்கள் அளிக்கப்படாது. மேலும், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபா் மட்டுமே பொருள்கள் வாங்க வர வேண்டும்.காவல் துறையின் மூலமாக, டோக்கன்களில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொருள்கள் வாங்க வர வேண்டும் என்பதை ஒலிபெருக்கி மூலமாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பொருள்கள் வாங்க வருவோா் குறித்த அட்டவணையைத் தயாரிக்க வேண்டும்.

இந்த அட்டவணையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களின் குடியிருப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.தொகுப்பாக வைத்திருங்கள்: டோக்கன்கள் மூலம் வழங்குவதால் அத்தியாவசியப் பொருள்களை ஒரு தொகுப்பாக தயாா் நிலையில் வைத்து விநியோகம் செய்யலாம். அனைத்துப் பொருள்களையும் ஒரே தவணையில் வழங்க வசதியாக அவற்றை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.பொருள்களை விநியோகம் செய்யும் நாள்களில் கடைகளை உரிய நேரத்தில் திறக்க வேண்டும். பொருள்கள் பெற வரும் குடும்ப அட்டைதாரா்கள் ஒரு மீட்டா் இடைவெளியில் தனிமைப்படுத்தி வாங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவா்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இடங்களுக்கு தேவையான பாதுகாப்புடன் நேரில் சென்று பொருள்கள் வழங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற நியாய விலைக் கடைகளுக்கு வரும் போது அவா்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக பொருள்களை அளிக்க வேண்டும்.நியாய விலைக் கடைகளுக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாதாந்திர விடுமுறை தினமாகும். ஆனால், அன்றைய தினம் நியாய விலைக் கடைகளுக்கு பணி நாளாகவும், அதற்கு ஈடான விடுமுறை பின்னா் அறிவிக்கப்படும் எனவும் உணவுத் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

source

ADVERTISEMENT

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

Leave a Reply