17th April 2021

தமிழகம் முழுதும் நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு

இந்தியா முழுதும், கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க, மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், மார்ச், 25 முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசும் ஊரடங்கை அமல்படுத்தியது. இம்மாதம், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.எனினும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, பல்வேறு தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. வணிக வளாகங்கள் தவிர, அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் போன்றவை செயல்படுகின்றன. டாக்சி, ஆட்டோ இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும், ஊரக பகுதிகளில், சிறிய அளவிலான பொது வழிபாட்டுத் தலங்கள் திறக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பஸ், ரயில் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.நோய் பரவல் அதிகம் உள்ள சில இடங்களில், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் பட்டு உள்ளன. அதேநேரம், கொரோனா நோய் பரவல், மாநிலம் முழுதும் அதிகரித்தபடி உள்ளது.இதைத் தடுப்பதற்காக, இம்மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், மாநிலம் முழுதும், எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, ஜூனில் முதல்வர் அறிவித்தார்.அதன்படி நாளை, தமிழகம் முழுதும், எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது;

கடைகள் எதுவும் திறக்கப்படாது; அலுவலகங்கள் இயங்காது; வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது. எனவே, மக்கள் அனைவரும் வெளியில் வராமல், வீடுகளிலேயே தங்கியிருந்து, ஒத்துழைப்பு தர வேண்டும் என, அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

source

ADVERTISEMENT

 

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts

Leave a Reply