26th February 2021

பாராளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி – விவசாய சங்க தலைவர் அறிவிப்பு!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள், அதனைத் தொடர்ந்து சாலை மறியலிலும், ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள அவர்கள், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை வீட்டுக்குச் செல்வதில்லை என்ற முடிவில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால், அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து ராஜஸ்தானில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பேசிய ராகேஷ் திகைத், நாடாளுமன்றதை நோக்கி நடத்தப்படும் பேரணியில், 40 லட்சம் டிராக்டர்கள் ஈடுபடுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “பாராளுமன்றத்தை நோக்கிய பேரணியே நமது அடுத்த முடிவாக இருக்கும். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படாவிட்டால் 4 லட்சம் டிராக்டர்கள் மட்டுமல்ல, 40 லட்சம் டிராக்டர்களும் அங்கு செல்லும்” எனத் தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Source: Nakkheeran

More News

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts