மொழிப்போர் தியாகி நினைவுத்தூணில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி


மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ .வி .சி. கல்லூரி முன்பு உள்ள மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு தூணில் அ.தி .மு.க வினர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவுத்தூணுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ்குமார், ஏ.கே .சந்திரசேகரன், நகர செயலாளர் நாஞ்சில் கார்த்திக், முன்னாள் எம்.எல் .ஏ.க்கள் விஜயபாலன், ரங்கநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆத்தூர் செல்வராஜ், மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் அலி, முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர் இதைப் போல மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் அதன் நிருவாகிகள் துறைகுணசேகரன் பவுல்ராஜ் ஆகியோர் சாரங்கபாணி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழ் ஆர்வலர்கள் பலர் சாரங்கபாணி நினவுத்தூணுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.