த்ரிஷா பிறந்தநாள்: 19 ஆண்டுகள் ஹீரோயினாக சாதனை படைத்திருக்கும் த்ரிஷா!

கடந்த 19 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வசீகரத் தோற்றத்தாலும் அபாரமான நடிப்பாற்றலாலும் தமிழ் திரை உலகை அலங்கரிக்கும் திரிஷா குறித்த ஒரு சிறப்பு தொகுப்பை இங்கே குறிப்பிடுகிறோம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில், ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது. ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வந்து தமிழ் சினிமாவின் ஆச்சரியமாக திகழ்கிறார் த்ரிஷா.

1999-ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் போட்டியில் வெற்றிபெற்ற த்ரிஷா ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக கூட்டத்தில் வந்துபோகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் லேசா லேசா, மௌனம் பேசியதே படங்களின் மூலம் நாயகியாக அறிமுகமான அவர், சாமி, கில்லி என அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்தார்.

ரஜினி, கமல், விஜய், அஜித்தில் தொடங்கி சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடனும் நடித்த ஒரே நடிகை எனும் சிறப்பு அந்தஸ்து த்ரிஷா வசமே உள்ளது.

அறிமுகமான ஆண்டில் இருந்து சராசரியாக வருடத்திற்கு நான்கு படங்கள் என நடித்துவந்த த்ரிஷாவின் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான தூங்காவனம் 50-வது படமாக வெளிவந்தது. ஒரு நாயகி 50 படங்களில் நடிப்பது என்பதே தமிழ் சினிமாவில் ஆச்சரியமான விஷயம். ஆனால் 50-வது படம் நடிக்கும்போதும் த்ரிஷா முன்னணி நாயகியாகவே இருந்தது கூடுதல் ஆச்சரியமான ஒன்றாகும்.

த்ரிஷாவின் கேரியரில் ஒரு மைல்கல் படமாக இன்று வரை கொண்டாடப்படும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. வசன உச்சரிப்பில் தொடங்கி, ஹேர் ஸ்டைல், புடவை என விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி செய்தது அனைத்தும் அன்றைய தேதியில் டிரெண்டாக மாறியது.

அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா அளவு பேர் சொல்லும் ஒரு படம் இல்லையே என வருத்தப்பட்ட அவருடைய ரசிகர்களுக்கு 2018-ம் ஆண்டு வெளியான 96 மூலம் மிகப்பெரிய கம் பேக் கொடுத்தார் த்ரிஷா.

நான்கைந்து படங்களுடன் காணாமல் போகும் நாயகிகளுக்கு மத்தியில் கடந்த 19 வருடங்களாக தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக அதே வசீகரத்துடன் வலம்வரும் த்ரிஷா, தன் வெற்றிப்பயணத்தின் மூலம் தமிழ் திரை நாயகிகளுக்கான இலக்கணத்தையும் மாற்றியமைத்திருக்கிறார்.

More News

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி

admin See author's posts

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

You cannot copy content of this page