அவசர செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் திணறல்: சர்வர் முடங்கியதால் பரபரப்பு

லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், அந்த வங்கிக்கு நேற்று வந்த வாடிக்கையாளர்கள் பலர், பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். வங்கி சர்வர் முடங்கியதால் பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக இந்த வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையில், வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வராக்கடன் அதிகரிப்பு காரணமாக லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி நிலை மிகவும் மோசமாகி விட்டது. இதனால் இந்த வங்கியை சீரமைப்பு நடவடிக்கையின் கீழ் கொண்டு வந்துள்ள ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு திடீர் கட்டுப்பாடு விதித்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. உடனடியாக இது அமலுக்கு வந்துள்ளது. ஒரு மாதத்துக்கு இந்த கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.இதன்படி லட்சுமிவிலாஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு அல்லது இதர டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் இருந்து 25,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது. ஒருவரே இந்த வங்கியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்திருந்தால், தனது கணக்குகளி–்ல் இருந்து மொத்தமாக மேற்கண்ட தொகையை மட்டுமே எடுக்க முடியும். உயர் கல்வி, மருத்துவ சிகிச்சை, திருமணம் அல்லது இதர தவிர்க்க முடியாத செலவினங்களுக்காக 25,000க்கு மேல் எடுத்துக் கொள்ளலாம் என கட்டுப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காலக்கட்டத்துக்குள் லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வரைவு திட்டத்தை செயல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், மேற்கண்ட தகவல் வெளியானதும், வாடிக்கையாளர்கள் பலர், லட்சுமி விலாஸ் வங்கியில் குவிந்தனர்.

ஆனால், பணம் எடுக்க முடியாமல் பலர் திண்டாடினர். வங்கியில் சர்வர் செயல்படவில்லை என்பதால் சிறிது நேரம் கழித்து வருமாறு கூறியதாகவும், மீண்டும் வந்தும் பணம் எடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் எடுக்க முடியாமல் திண்டாடினர். அவர்களை வங்கி அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், வங்கி பணம் பாதுகாப்பாக உள்ளது. வாடிக்கையாளர்கள் அச்சப்பட தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

More News

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலையில் பணி!

admin See author's posts

இணையவழி பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் திடீர் தடைகளை களைய தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்- அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

admin See author's posts

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts