சசிகலா தேர்தலில் போட்டியா? சிலீப்பர் செல் யார்? : டிடிவி தினகரன் பேட்டி

24 மணி நேரம் பயணம் செய்ததில் சசிகலா உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.

பெங்களூருவில் இருந்து நேற்று காலை 7 : 30 மணி அளவில் சென்னை புறப்பட்ட சசிகலா இன்று காலை 6.30 மணி அளவில் சுமார் 23 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இல்லத்திற்கு வந்தடைந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 24 மணி நேரம் பயணம் செய்ததில் சசிகலா உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.

நான்கு வருடமாக நான் சொல்லக் கூடிய சிலீப்பர் செல், சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இருக்கலாம் விரைவில் வருவார்கள்.

மக்கள் மனதில் சசிகலா எந்த தவறும் செய்யவில்லை என்பதுதான் இருக்கிறது, அதற்கு சாட்சிதான் இந்த இருபத்தி நான்கு மணி நேர வரவேற்பு.

ஜனநாயக ஆயுதம்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திமுக ஆட்சியைப் பிடிக்க விடமாட்டோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அமமுகவைத் தொடங்க முக்கிய காரணம் அதிமுகவை மீட்டெடுப்பதற்கும், தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை நிலைப்பதற்கும்தான்.

மராமத்து பணிக்காக அதிமுக அலுவலகத்தை மூடி வைத்திருப்பதாக கேள்விப்பட்டோம், எங்களைப் பார்த்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் பயப்படவேண்டாம் நாங்கள் அவர்களைப் போல் குறுக்கு வழியில் செல்ல மாட்டோம்.நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் சசிகலா உடல்நலம் குறித்து விசாரித்தார். அதிமுகவிலிருந்து என்னிடம் நிறைய பேர் பேசினார்கள் அதை எல்லாம் வெளிப்படையாக கூற முடியாது. அமமுக தொண்டர்களுடன் அதிமுக தொண்டர்களும் சசிகலாவை வரவேற்றனர்.

கூவத்தூர் குறித்து ரகசியம் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் ஆர்.கே. நகர் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

சட்ட ரீதியாக ஆராய்ந்து சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ஆலோசனை பெறப்படும். ஆளுமை என்கிற வார்த்தைக்கே அதிமுகவில் இடமில்லை. குருட்டு யோகத்தில் தவழ்ந்து வந்து பதவி பெற்றவர் பழனிசாமி.

டெல்லிக்கு சென்றாலே அரசியல் காரணம்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜெயலலிதா நினைவிடத்தை திறந்தவுடன் சசிகலா அங்கு செல்வார்.

Source: TamilNews18

More News

திமுக கூட்டணியில் விசிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை…!

admin See author's posts

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

admin See author's posts

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts