20th September 2021

தமிழகத்தில் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதை தட்டி சென்ற இரு ஆட்சியர்கள்.!

தமிழக அரசு சார்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர்.லால்வேனா வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,

“தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய, மாவட்ட ஆட்சியர், மருத்துவர், வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனம், அரசு சாராத தொண்டு நிறுவனம், சேவை புரிந்த சமூகப் பணியாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2021-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது தமிழக அரசின் மாநில விருதுகளை வழங்குவதற்காக, மேற்கூறப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதிலிருந்து தகுதியான நபரை தேர்வு செய்வதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் தலைமையில், கடந்த ஜூலை 8-ந் தேதி தேர்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி,

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியராக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம்: திருச்சி ஹோலிகிராஸ் சர்வீஸ் சொசைட்டி.

சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர் – நாகர்கோவில் மரிய அலாசியஸ் நவமணி.
சேவை புரிந்த சிறந்த மருத்துவர் – பூ.பத்மபிரியா.

மிக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் – வி ஆர் யுவர் வாய்ஸ், சென்னை.

சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.

இதில், மாவட்ட ஆட்சியர்களை தவிர மற்றவர்களுக்கான விருதுகள், சுதந்திர தின விழாவின்போது முதல்-அமைச்சரால் வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர்களுக்கான விருதுகள், மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டின் போது வழங்கப்படும். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page