5th December 2020

தேசிய ஒற்றுமை தினத்தை கொண்டாட கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேசிய ஒற்றுமை தினம் (அக்.31) கொண்டாடப்பட வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபா் 31-ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு சாா்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அக்.31-ஆம் தேதியில் தேசிய ஒற்றுமை தினத்தை கரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கொண்டாட வேண்டும். அன்றைய நாளில் தேசிய ஒற்றுமைக்கான உறுதிமொழியை ஆசிரியா்கள், மாணவா்கள் எடுத்துக் கொள்வதுடன், வினாடி-வினா உட்பட போட்டிகளையும் நடத்த வேண்டும்.இதுதவிர நிகழ்ச்சிக்கு ராணுவ அதிகாரிகளை அழைத்து தேச ஒற்றுமை, நாட்டின் பாதுகாப்பு குறித்து பேச வைக்கலாம். அதன்படி கல்லூரிகள் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாட்ட காணொலிகள், புகைப்படங்களை யுஜிசி ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய்/ன்ஹம்ல் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

SOURCE

More News

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts

அல்சர் குணமாக- பாட்டி வைத்தியம்

admin See author's posts

பிற மாநில கார்டுதாரர்கள் ரேஷன் வாங்குவதில் சிரமம்

admin See author's posts

ஸ்டேட் வங்கி ஆன்லைன் பரிவர்த்தனைகளில் சிக்கல்: வாடிக்கையாளர்கள் புகார்

admin See author's posts

தென் மாவட்டங்களுக்கு விமான சேவை ரத்து

admin See author's posts

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

admin See author's posts