27th November 2020

நடப்பு ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 14.45 கோடி டன்கள் – மத்திய அமைச்சர் மதிப்பீடு

சென்ற 2019-20ம் ஆண்டு காரீப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி 14 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரம் டன்களாக இருந்தது. அப்போது விளைந்த தானியங்கள் மத்திய அரசால் விவசாயிகளிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தது. தேவைக்கேற்ப மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டு நாட்டின் எந்த பகுதியிலும் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. வெளிச்சந்தை விலைவாசியும் கட்டுப்படுத்தப்பட்டது. Also Read – மீண்டும் கட்டமையும் பொருளாதாரம்: EPFO சந்தாதாரர் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் அதிகரிப்பு! இது போக கையிருப்பு தானியங்கள் கொரோனா காலத்தில் மக்களுக்கு இலவசமாக வழங்க பயன்பட்டன. ஊரடங்கால் போக்கு வரத்து முடங்கிய போதிலும் மக்களுக்கான உணவுப் பொருள்களை தங்கு தடை இன்றி நாட்டின்மூலை முடுக்குகளுக்கு கூட கொண்டு சென்று சேர்த்தோம். இந்நிலையில் இந்த ஆண்டு கொரானா காலத்திலும் ஊரடங்கால் விவசாயம் தடை இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

கொரோனா பாதிப்புகள் இந்திய கிராமப்புறங்களில் குறைவு என்றாலும் கொரோனாவை முன்னிட்டு நகர்ப்புறங்களுக்கு அரசு வழங்கிய சலுகைகள், நிவாரணம் அனைத்தும் கிராமப்புற மக்களுக்கும் கிடைத்தது. மேலும் நன்றாக பெய்த பருவ மழையை பயன்படுத்தி, விவசாயம் சிறப்பாக நடைபெறுவதற்கான அடிப்படை வசதிகளை மத்திய அரசு செய்து கொண்டே இருந்தது.

வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியற்ற கடன்கள், மானிய முறையிலான பாசன வசதிகள், குறைந்த பிரிமியம் கொண்ட பயிர் காப்பீட்டு திட்டங்கள், விலைகள் குறைக்கப்பட்டு தட்டுப்பாடில்லாத வகையில் உரங்கள் இவற்றுக்கு உறுதி செய்யப்பட்டன. இந்நிலையில் 2020-21ம் ஆண்டு காரீப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி 14 கோடியே 45 லட்சத்து 20 ஆயிரம் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தையும் கடந்து, உணவு தானியங்களின் விளைச்சல் அமோகமாக நடைபெற்றிருப்பது மதிப்பீடுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், உணவு தானியங்கள் பயிரிடப்பட்ட நிலத்தின் அளவு சென்ற ஆண்டைவிட 4.51 சதவீதம் கூடுதல் என்றார். மொத்தம் இந்த ஆண்டு 1121.75 லட்சம் ஹெக்டேர் என்றளவில் பயிரிடப்பட்டதாக அவர் கூறினார். பணப்பயிர்களாக கருதப்படும் கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் விளைச்சலும் மிக சிறப்பாகவே இந்த ஆண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். மேலும், புதிய வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து விவசாயிகள் எதிர்கட்சிகளால் தவறாக வழிநடத்தப்படுவதாக கூறினார். நாட்டில், குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையிலான கொள்முதல் மற்றும் மண்டிகள் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.

SOURCE

More News

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts

உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு விருது

admin See author's posts

நிவர் புயல் இன்று முழுமையாக கரையைக்கடக்கும் மேலும் 2 புயல் அடுத்த வாரம் வருகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts