நாடு முழுவதும் 3-ஆம் கட்ட தளர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியீடு!


நாடு முழுவதும் 3-ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதியன்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதையடுத்து மேலும் 5 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தற்போது 6ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதில், #Unlock1 மற்றும் #Unlock2 அடிப்படையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று 3ம் கட்ட தளர்வுகள் குறித்த அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தளர்வுகள் ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது.
➤ நாடு முழுவதும் இரவில் தனிமனித நாடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
➤ ஆகஸ்ட் 5 முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி.
➤ தனிமனித இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து சுதந்திர தினம் கொண்டாட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.
➤ பள்ளிக், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் செயல்பட ஆகஸ்டு 31ம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
➤ மெட்ரோ ரயில், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடர்கிறது.
➤ திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்குமான தடை நீட்டிப்பு.
➤ சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு; வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் பணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
➤ மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான அத்தியாவசிய தேவைகள், சரக்குப் போக்குவரத்துக்கு அமனுதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில தளர்வுகளை மாநில அரசுகள் நிலவும் சூழலைப் பொறுத்து முடிவெடுக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.