26th November 2020

UPSC சார்பில் வேலை

UPSC சார்பில் வேலை

UPSC சார்பில் மருத்துவ அலுவலர் மற்றும் இதர பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

மொத்த காலியிடம் : 16

விஞ்ஞானி பி 1

உதவி இயக்குநர் –1

மருந்து ஆய்வாளர் –1

மருத்துவ அதிகாரி –9

மருத்துவ அதிகாரி (யுனானி) –4

 

வயது வரம்பு :

விஞ்ஞானி பி, உதவி இயக்குநர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

 

மருந்து ஆய்வாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 30 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

 

கல்வித் தகுதி:

விஞ்ஞானி பி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பாடங்களில் ஒன்றாக இயற்பியல் / கணிதம் / பயன்பாட்டு கணிதம் / இயற்பியல் அல்லது கணிதத்துடன் தடய அறிவியல் முடித்திருக்க வேண்டும்.

 

உதவி இயக்குநர் :

வேதியியல் அல்லது உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

மருந்து ஆய்வாளர் :

பார்மசி பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது யுனானி மருத்துவ முறை அல்லது டிப்ளோமா.ன் யுனானி மருத்துவ முறை பயின்றிருக்க வேண்டும்.

 

மருத்துவ அதிகாரி :

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1970.ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆயுர்வேதத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் October 17.ம் தேதிக்குள் upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கும் நாள்: September 30 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: October 17 வரை

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கான கடைசி நாள்: October 18

 

Leave a Reply