28th November 2020

அமெரிக்கா-இந்தியா திட்டமிடல், பங்களிப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரை

கொரோனா அனைவரையும் முடக்கி போட்டாலும், புதிய சிந்தனைகளை விதைத்துள்ளது. இதுவரை இல்லாத நம்மை சூழ்ந்திருக்கும் தற்போதைய சூழ்நிலை, புதிய சிந்தனை, புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது. மனிதவள ஆற்றலை நமது மேம்பாட்டுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்ற புதிய சிந்தனையை விதைத்துள்ளது.

2020ம் ஆண்டின் முடிவு இப்படி இருக்கும் என ஆண்டின் துவக்கத்தில் நாம் நினைத்தோமா? இப்படியான இக்கட்டான சூழல் ஏற்படும் என நினைத்திருக்க மாட்டோம். உலகையே உலுக்கி இருக்கும் கொரோனா பரவல், தனிமனிதன் ஒவ்வொருவரையும் கடுமையாக பாதித்திருக்கிறது. கொரோனா காலம், மனிதவள ஆற்றலை எப்படி பயன்படுத்தலாம் என்பதை நமக்கு கற்பித்திருக்கிறது.

இந்தியாவில் மருத்துவ வசதிகளை விரைவாக உருவாக்கியதால், கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வருவோரின் விகிதமும் உயர்ந்து வருகிறது. கொரோனா பலவிவகாரங்களை பாதித்துள்ள போதும், 130 கோடி இந்திய மக்களின் நம்பிக்கையை பாதிக்க முடியவில்லை. உலகிலேயே மிகப்பெரிய வீட்டு வசதி திட்டம், டிஜிட்டல் மருத்துவ வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்போது எடுக்கப்படும் நடவடிக்கை, இந்தியாவை நாளை வளம் மிக்கதாக மாற்றுவதுடன், தற்சார்பு இந்தியா உருவாக அடித்தளமிடும். வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவில் 20 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

More News

ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts

Leave a Reply