27th November 2020

ராகுல் காந்தியை தாக்கிய உத்தரபிரதேச போலீசாருக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி கடும் கண்டனம்

மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

உத்தரபிரதேச மாநிலம் பட்டியலின வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூரமாக கொண்டுள்ள கொடூரமாக கொன்றுள்ளார்கள். பல்ராம்பூரில் 22 வயது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பலியாகி உள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்றபோது, உத்தரபிரதேச காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளனர். ராகுல்காந்தி ஒரு அகில இந்திய கட்சியினுடைய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் உத்தரபிரதேச காவல்துறையினர் ராகுல்காந்தியை கீழே தள்ளிவிட்டனர்.
இது மனித உரிமை மீறலாகும்.
ஒரு அகில இந்திய தலைவராக இந்த நிலை என்றால் உத்தர பிரதேசத்தில் சாமானியனின் நிலை என்ன என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் நடப்பது மக்களாட்சி அல்ல காட்டாட்சி; விலங்குகளின் அட்டூழிய ஆட்சியாக உள்ளது. உத்தரபிரதேச காவல்துறையின் அத்துமீறலுக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும். ராகுல் காந்தியை தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுத்து உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் அந்த காவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் .
தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவோடு காவல்துறையினரின்அட்டூழியம் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது .அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தேசிய மனித உரிமை கமிஷன் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக மனித உரிமை மீறலை கண்டித்து மனித உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் .
அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியை தாக்கிய உத்தரபிரதேச போலீசார் மீது உத்தரபிரதேச அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த சம்பவத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
உத்தர பிரதேச அரசாங்கம் இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts