தடுப்பூசி ஸ்டாக் இல்லாமல் மூடப்பட்ட தடுப்பூசி மையங்கள்: தமக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் !!!

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல அரசு தடுப்பூசி மையங்கள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டன.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரமாக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் முன்னதாக தடுப்பூசி போட்டுக் கொள்ள அவ்வளவாக ஆர்வம் காட்டாத மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகை புரிய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 3,864 அரசு 931 தனியார் தடுப்பூசி மையங்கள் உள்ளது. இதுவரை தமிழகத்தில் சுமார் 45 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல அரசு தடுப்பூசி மையங்கள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டன. தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளதால், அடுத்த 10 நாட்களுக்கு தட்டுப்பாடியின்றி தடுப்பூசிகள் கிடைக்கும் வகையில், 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவேக்சின் என மொத்தம் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது

Source: Webdunia

More News

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

You cannot copy content of this page