மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகதேசி விழா: ராஜ அலங்காரத்தில் பெருமாள் காட்சி


மயிலாடுதுறையில், பஞ்ச அறங்களில் ஒன்றானது 108 வைணவ ஆலயங்களில் 22 வது ஆலயமான பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சந்திரன் வழிப்பட்டு சாபவிமோச்சனம் பெற்ற இந்த ஆலயத்தின் வைகுண்ட ஏகதேசி திருவிழா கடந்த 7ம் தேதி துவங்கி நடைபெற்றது. பகல்பத்து விழாவின் இரண்டாவது நாளான இன்று பெருமாள் ராஜ அலங்காரத்தில் புறப்பட்டு உள் பிரகார வீதி உலா நடைபெற்றது. திருவந்திக்காப்பு மண்டபத்தில் சிறப்பு தீவர்த்தனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.